The Model School (அரசு மாதிரி பள்ளிகள்)

2–4 minutes

நம்மை வாழ்கையில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் பிரதானமாக இருப்பது நாம் கற்கும் கல்வி தான். என்னுடைய இந்த பதிவு அந்த கல்வியை பற்றியதுதான்.  நம் தேசத்திற்கு நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும். அந்த தலைமை நம்மில் இருந்து எழ வேண்டும்.

ஆனால் இங்கு ஒரு பூக் கடை தொழிலாளரின் மகளும், ஒரு சாதாரண விவசாயியின் மகனும் தலைவனாக முடியுமா?, ஆம் முடியும் அது எப்படி என்று நினைக்கிறீர்களா?  அதற்கு தான் அரசு மாதிரிப்பள்ளி (The Model school) என்ற ஒரு சிறப்பு திட்டத்தை தமிழ் நாடு அரசு கொண்டு வந்து உள்ளது. ஆனால் எதற்கு இந்த மாதிரி பள்ளி எத்தனையோ கல்வி முறை CBSC,STATE BOARD… போன்றவை இருந்தும் எதற்கு இந்த மாதிரிப்பள்ளி ?

அரசுப்பள்ளி மாணவர்களும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அரசுப்பள்ளிகளுக்கு  முன் மாதிரியாக திகழ, அரசு மாதிரி பள்ளி  கல்வித்துறை மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நந்தகுமார்(IAS) அவர்களால் 2021 ஆம் ஆண்டு மாதிரிப் பள்ளி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு எலைட்பள்ளியாக (Elite School) தொடங்கப்பட்டது.

இது அந்தந்த மாவட்டதில் உள்ள அனைத்து அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மதிப்பெண் அடிப்படையிலும்,தமிழ் நாடு அரசு இட ஒதுக்கீடு அடிப்படையிலும், மாணவர்களின் கலை திறமை மற்றும் விளையாட்டு திறமை அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர். பிறகு அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளா உணவு, உடை, உறைவிடம் அரசு சார்பில் செய்து கொடுப்பர்.

அவர்கள் அறியாத படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு , நுழைவுத்தேர்வு போன்றவற்றில் மாணவர்களை பயிற்றுவித்து, சமூகத்தில் சிறந்த மாணவனாக இல்லாமல் ஒரு சமூகத்திற்கு தேவையான சிறந்த தலைவனை உருவாக்குவது இப்பள்ளியின் நோக்கம். இந்திய அரசாங்கத்தால் நடத்தக்கூடிய முக்கிய கல்வி நிறுவனத்தில் படிக்கக்கூடிய வெளி மாநிலங்களில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அரசு அவர்கள் படிப்பிற்கான முழு செலவயும் ஏற்கிறது. அவர்களை இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரியிலும் சேர்த்தும் விடுவர். தற்போது இங்கு 500கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் இது இன்னும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு உண்டுஉறைவிட பள்ளி(Residential School) இங்கு மாணவர்கள் படிப்பதோடு நில்லாமல் பண்முக திறமை கொண்டவர்களாக இருக்க அவர்களுக்கு உள் இருக்கும் திறமைகளை கண்டறியும் வகையில் அங்கு ஒரு சிறப்பு ஆசிரியர் (CIF) (community impact fellow) உள்ளார். இவர் மாணவர்களை பல்வேறு போட்டிகளான பேச்சு, கட்டுரை, கபடி, நடனம், பாடல் etc., போன்ற போட்டிகளுக்கு பயிற்றுவித்து வெளியே அழைத்து சென்று வெற்றி பெறவும் மாணவர்களுக்கு துணை நிற்பார்.

மாணவர்களுக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரை உடற்பயிற்சி, பிறகு பள்ளிக்கு சென்ற உடன் சரியாக 9 மணி முதல் 11 மணி அளவில் நுழைவுத்தேர்வுகளுகான பயிற்சி எடுக்கப்படும். அதாவது மருத்துவ துறைக்கு (NEET) தேர்வும்,பொறியியல் துறையில் பிரதானமாக உள்ள JEE-MAIN and JEE -ADVANCE போன்ற நுழைவு தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுக்கப்படும். இதனை சென்னையில் உள்ள (Aha Guru) என்ற ஒரு குழு  சிறந்த முறையில் நடத்தி வருகிறது. இந்த குழு வாரம் வாரம்  திங்கள் கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாதிரித்தேர்வு வைக்கப்படும்.

இதை போன்ற மற்ற நுழைவு தேர்வுகளான

  • CLAT- The Common Law Admission Test
  • CUET – The Common University Entrance Test
  • NIFT – National Institute of Fashion Technology
  • NATA – The National Aptitude Test in Architecture
  • BITSAT – Birla Institute of Technology and Science Admission Test
  • AIIMS – All India Institute Of Medical Sciences

போன்ற மாணவர்களுக்கு விருப்பம் இருக்கும் தேர்வுகளுக்கு தினசரி மாலை 6 மணி முதல் 7 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் நோக்கம் அரசுப் பள்ளி மாணவர்களும் மத்திய பல்கலை கழகத்தில் சேர முடியும் , சேர்ந்து சாதிக்க முடியும் என்பதற்காக. இந்த வகுப்புகள் முடிந்த பிறகு தான் பாட புத்தகத்தில் பாடம் எடுக்கப்படும்.

இவை போக மாணவர்களுக்கு படிப்பு மட்டும் வாழ்க்கை என்று இல்லாமல் மாலை வகுப்புகள் ( கராத்தே, சிலம்பம்,கதை சொல்லுதல்,பறை ) போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்படும். இவைகளுக்கு என்று சிறந்த ஆசிரியர்கள் state order மூலம் மாலை 4 மணி அளவில் பள்ளிக்கு வந்து தன் கலைகளை மாணவர்களுக்கு கற்று தருவர்.இந்த பள்ளியில் படிப்பு மட்டும் இல்லாமல் கலைகளிலும் சிறந்து விளங்க ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரம் ஒரு முறை workshop நடத்தப்படும் இதில் மாணவர்களுக்கு தேவையான வாழ்க்கை பாடம், குழந்தைகள் எப்படி எதிர் காலத்தில் பணத்தை கையாள்வது,குழந்தைகள் விழிப்புணர்வு என ஒவ்வொரு வாரமும் அந்தந்த துறையில் பிரதானமாக உள்ளவர்கள் வந்து பயிற்றுவிப்பர். இது மாணவர்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புவது மட்டும் இல்லாமல் சமூக சிந்தனையை தூண்டுகிறது.

இதன் மூலம் வைக்கப்பட்ட தேர்வு வைக்கப்படும். இந்த தேர்வு இரண்டு கட்டமாக வைக்கப்படும் , முதலில் offline தேர்வு, இரண்டாவது கட்டம் நேர்முகத்தேர்வு. இந்த தேர்வுகளில்  தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கனவுகளை நினைவாக்கி கொள்கின்றனர்.

இப்பள்ளி முதன் முதலில் இராமநாதபுரம் மாவட்டதில் அமல்படுத்தப்பட்டது.தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த பள்ளி, படிப்பதற்காக வாய்ப்பை தேடிக்கொண்டு இருக்கும் அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

அரசின் நோக்கம் இந்த பள்ளியை போன்றே அனைத்து அரசுப் பள்ளியும் உருவாக வேண்டும் என்பது.இந்த மாதிரி பள்ளியில் படித்த மற்றும் படித்து கொண்டிருக்கும் பெரும்பாலான மாணவர்கள் இன்று பல இடங்களில் தான் விரும்பிய துறையில் சாதித்து கொண்டு இருக்கிறார்கள்.

Janani Sundarapandi

12th Standard – The Model School Student

Ramanathapuram.

Discover more from Stugazine

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading