எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
தமிழ் இலக்கியம் படிப்பதனால் என்னென்ன பயன்கள் இருக்கின்றன என்பதை இக்கட்டுரையில் விளக்குகின்றேன்
தமிழ் உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் மக்கள் பேசும் மொழியாகும் மற்றும் உலகின் மிகப் பழமையான இலக்கிய மரபுகளை கொண்டது. இதன் தொடக்கங்களை 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக பின்தொடர முடிகிறது. தமிழ், இந்தியாவின் தமிழ்நாடு, இலங்கை மற்றும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பிற்கான தகுதி பெற்றுள்ளது. தமிழின் இலக்கிய நிதி, சமூகம் மற்றும் அரசியலின் வளமான வரலாறு, மற்றும் மெருகான திரைப்படக் கலைகள் ஆகியவை இந்த முக்கியமான மற்றும் மகிழ்வளிக்கக் கூடிய மொழியைப் படிக்க பல காரணங்களில் சிலவாகும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழ் இலக்கியத்தின் பெரும் பங்களிப்பும் காரணமாகும். இது மனித வாழ்க்கையின் பல்வேறு காரணங்களைப்பற்றிய நுட்பங்களையும், தத்துவங்களையும் வழங்குகிறது.
பிஏ தமிழ் (BA Tamil Literature) இலக்கியத்திற்கான தகுதிகள், சேர்க்கை பெறுவது எப்படி?
+12 தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழியின் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்கள் இறுதித் தேர்வில்குறைந்தபட்சம் 50-60% மதிப்பெண்கள் இருக்க வேண்டும். தமிழ் இலக்கியம்சார்ந்த நுழைவுத் தேர்வு நடத்தும் கல்வி நிறுவனங்களும் உள்ளன. பெரும்பாலான கல்லூரிகளில், இணைய வழி விண்ணப்பபடிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். சில கல்லூரிகளில், நேரடியாக கல்லூரி வளாகத்தில் விண்ணப்பிக்கலாம்.
பிஏ தமிழ் (BA Tamil Literature) இலக்கிய நுழைவுத் தேர்வுகளில் ஒரு விரைவான பார்வை
தேர்வு முறைகள் வாய் மொழி மற்றும் வாசிப்பு புரிதல், நடப்பு விவகாரங்கள் மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் அளவு திறன் போன்ற பிரிவுகளைக்கொண்டிருக்கும். தேர்வு இணைய வழியில் இருக்கும் அதாவது கணினி அடிப்படை யிலான தேர்வு (CBT). நுழைவுத் தேர்வுகளில் கால அளவு பொதுவாக 120 முதல் 180 நிமிடங்கள் ஆகும்.
பி ஏ தமிழ் (B A Tamil Literature) இலக்கியம் படிப்பு 3 ஆண்டுகள் கொண்டது.
உலகின் சிறந்த பிஏ தமிழ் (BA Tamil Literature) இலக்கிய கல்லூரிகள்
- சென்னை பல்கலைக்கழகம் – https://www.unom.ac.in/
- பாரதிதாசன் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி – https://www.bdu.ac.in/
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம்- https://annamalaiuniversity.ac.in/
- தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் – https://www.tamiluniversity.ac.in/
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – https://mkuniversity.ac.in/
- லயோலா காலேஜ் சென்னை – https://www.loyolacollege.edu/
- ஹார்வர்ட்(Harvard) பல்கலைக்கழகம் – https://sas.fas.harvard.edu/courses/languages/tamil/
வேலை வாய்ப்புகள் சில
- ஆசிரியர் (தமிழ்) (Teacher / Professor)
- ஆராய்ச்சியாளர் (Researcher)
- எழுத்தாளர் (Writer)
- மொழிபெயர்ப்பாளர் (Interpreter)
- உள்ளடக்க எழுத்தாளர் (Content writer)
- பத்திரிகையாளர் (Journalist)
- வானொலி ஒலிபரப்பாளர் (Radio Broadcaster)
- தொலைக்காட்சி தொகுப்பாளர் (Television Broadcaster)
- விளம்பரம் எழுத்தாளர் (Advertising Writer)
- கலாச்சார ஆராய்ச்சியாளர் (Cultural Researcher)
- வாடிக்கையாளர் சேவை (Customer service)
பிளாக் எழுத்து (Blog writing) ஏன் தமிழ் மாணவர்களுக்கு முக்கியம்?
தமிழ் மாணவர்களுக்கு Blog பதிவுகள் பல முக்கியமான நன்மைகளை வழங்குகிறது. இது தமிழ் மாணவர்களுக்கு சொற்களஞ்சியம் மற்றும் இலக்கணத்தை மேம்படுத்த உதவுகிறது. தங்கள் எண்ணங்களை தெளிவாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்தவும், பல்வேறு கதைசொல்லும் நுட்பங்களை அறிய உதவுகிறது . Blog பதிவுகளை எழுதும் போது, மாணவர்கள் தங்கள் தலைப்புகளை கண்டறிய வேண்டும். இது அவர்களின் ஆராய்ச்சி மற்றும் தகவல் திறன்களை வளர்க்க உதவுகிறது. இது பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை பெறலாம். உதாரணமாக, அவர்கள் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஊடக நிர்வாகியாக வேலை செய்யலாம். தமிழ்ப்படிக்கும் மாணவர்களுக்கு Blog writing ஒரு மதிப்புமிக்க கருவியாகும்.
பிஏ தமிழ் (BA Tamil Literature) இலக்கிய பட்டதாரியின் சம்பளம் (தோராயமானது):
- பள்ளி ஆசிரியர் : Rs.15,000 – Rs.30, 000 பிரதி மாதம்
- கல்லூரி விரிவுரை யாளர் : Rs.20,000 – 70,000 பிரதி மாதம்
- எழுத்தாளர் : Rs10, 000 – 30,000 பிரதி மாதம்
- மொழி பெயர்ப்பாளர்: Rs.10,000 – 30,000 பிரதி மாதம்
- பத்திரிகையாளர் : Rs.15,000 – 40,000 பிரதி மாதம்
- ஆராய்ச்சியாளர்: Rs.25,000 – 60,000 பிரதி மாதம்
இதுபோன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), TRB (Teachers Recruitment Board) தேர்வுகள் தமிழ் மொழி மற்றும் இலக்கியப் படித்து இருத்தால் முன்னூரிமை அளிக்கப்படுகிறது.
தமிழ் இலக்கியம் படிப்பது ஒரு பயணம் அதை அனுபவிக்கவும், புதிய விடயங்களை கற்றுக்கொள்ளவும் முழு மனதுடன் செயல்படுவோம்!
G. Varsha
BA Tamil – II Year
Government arts and science college for women, Paramakudi.
